பீரோவை உடைத்து நகை திருட்டு
நரிக்குடி அருகே பீரோவை உடைத்து நகையை திருடி சென்றனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே கட்டணூர், உச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பெத்துலட்சுமி (வயது 32). இவருடைய கணவர் மணிமாலை. இவர் கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். ஆதலால் இரவு நேரத்தில் பெத்துலட்சுமி அவருடைய வீட்டில் தூங்காமல் இவருடைய சித்தப்பா ராக்குச்சாமி வீட்டில் பிள்ளைகளுடன் தூங்குவது வழக்கம். இ்ந்தநிலையில் வழக்கம் போல் இரவு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பெத்துலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் கட்டணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.