அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

சின்னசேலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-01 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே பூண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52) விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். இதைநோட்ட மிட்ட மர்மநபர்கள், முருகனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் ரொக்கம், ½ பவுன் நகை, வெள்ளி கொடி, வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு ஆகியவற்றை திருடிச்சென்றனர். இதேபோல் பூண்டி நடுத்தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (39) என்பவரது வீட்டுக்குள்ளேயும் மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து முருகன், விஸ்வநாதன் ஆகியோர் தனித்தனியாக சின்னசேலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்