கம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்

கம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-10-12 17:20 GMT

கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் தெருவில் பிரசித்திபெற்ற மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல்சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட பந்தயத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 120 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

கம்பம்மெட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தொடங்கி, கம்பம்மெட்டு அடிவாரம் வரை எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற பந்தயத்தில் இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாட்டு வண்டி பந்தயத்தை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்