மாட்டு வண்டி பந்தயம்

அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் நேற்று காலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது

Update: 2022-10-08 21:13 GMT

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் நேற்று காலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் பெரிய மாடுகள் 9 ஜோடிகளும், தொடர்ந்து சின்ன மாடுகள் தலா 11 ஜோடிகள் வீதம் 2 பிரிவாக விறுவிறுப்பாக நடந்தது.

பின்னர் மாலையில் நடுமாடுகள் 19 ஜோடிகள் கலந்து கொண்டு ஓடின. ,இதை தொடர்ந்து குதிரைகள் தலா 9 வீதம் 18 குதிரை வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகள், குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை புதுப்பட்டியில் இருந்து தனிச்சயம் செல்லும் சாலை வரை பார்வையாளர்கள் இருபுறமும் நின்று கைத்தட்டி ரசித்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்