ஆடி களரி விழாவில் மாட்டு வண்டி பந்தயம்
சிங்கம்புணரி அருகே ஸ்ரீகொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடி களரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஸ்ரீகொக்கன் கருப்பர் சுவாமி கோவில் ஆடி களரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
சிங்கம்புணரி அருகே உள்ள ஸ்ரீகொக்கன் கருப்பர்சுவாமி கோவில் ஆடி களரி விழா உற்சவத்தை முன்னிட்டு எட்டு கரை இளைஞர்கள் நடத்தும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. முன்னாள் தமிழக தடவியல் துறை இயக்குனர் அனைத்து மறவர் கூட்டமைப்பு உயர்மட்ட ஆலோசகர் விஜயகுமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவரும் தேசிய செயலாளர் சுரேஷ் தேவர் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி தலைவர் அம்பலம் முத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. நகர அவைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காளாப்பூர் அம்பலக்காரர் பார்த்திபன் வரவேற்றார். பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் மொத்தம் 31 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டு பந்தயத்தில் 11 வண்டிகள் களத்தில் இறங்கின. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் களமிறங்கின.
பரிசு
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு மேலமடை சீமான் ராஜாவிற்கும், இரண்டாவது பரிசு சிங்கம்புணரி இளங்கோ தேவர் சின்னமாங்குளம் அழகுவிற்கும் வழங்கப்பட்டன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு கொட்டக்குடி வர்ஷா ரோஹித், இரண்டாம் பரிசு பரவை சின்னம்மா சின்ன வேலம்மாள், மூன்றாம் பரிசு திருச்சி செந்தில் பிரசாத் பெற்றனர். வெற்றி பெற்ற வண்டிகளுக்கும் வண்டி உரிமையாளர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஆடிக்களரி விழாவை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் சேர்வை தலைமை தாங்கினார். தொழிலதிபர் சரவணன், இளம்பருதி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐந்துநிலை நாடு ஆ.காளாப்பூர் சேகரம் பெரியபாலம் தேவர் சோலையில் குடி கொண்டிருக்கும் எட்டுக்கரை பங்காளி பாத்தியப்பட்ட கொத்தன் கருப்பர் சுவாமி ஆடி களரி விழா குழுவினர் மற்றும் எட்டுக்கரை இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.