மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-08-15 19:24 GMT

மாட்டு வண்டி பந்தயம்

அரிமளம் அருகே புதுநிலைப்பட்டி, கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 60 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது. பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சிறிய மாடு பிரிவு

நடுமாடு பிரிவில் பந்தய தூரமானது 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 16 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

சிறிய மாடு பிரிவில் பந்தய தூரம் 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 35 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பிரிவில் அதிகளவு வண்டிகள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு கருதி பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

பரிசு

பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்ட பந்தயதில் முதல் 4 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

பந்தயம் நடைபெற்ற கீழாநிலைக்கோட்டை - கல்லூர் சாலை இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவடிப்பட்டி ஊரார்கள், அம்பலகாரர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்