15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிஎஸ்என்எல் பைபர் கேபிள் திருடிய மர்ம நபர்கள்
ஈரோடு அருகே பிஎஸ்என்எல் பைபர் கேபிள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.;
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் செல்போன் சேவை இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர தேவை கூட உறவினர்களுக்கும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்து வந்தனர்.
பிஎஸ்என்எல் பைபர் கேபில் மூலம் கெத்தேசால், மாவள்ளம், தேவர்நத்தம், குளியாடா போன்ற 30-க்கும் மேட்பட்ட மலைகிராமங்களுக்கு லேண்ட்லைன் செல்போன் சேவை பிஎஸ்என்எல் மூலம் வழங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு பிஎஸ்என்எல் பைபர் கேபிளை மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இதனால் நேற்று முதல் தொலை தொடர்பு சேவை இல்லாமல் மலைகிராம மக்கள் அவதிபட்டு வருகின்றன. இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.