மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-13 20:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் நவீன கருவி மூலம் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறும்போது, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் மெமோகிராபி (ஸ்கேன்) பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 600 பெண்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 7 பேருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்