தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-04-16 18:45 GMT

கள்ளக்குறிச்சியில் தில்லை கோவிந்தராஜ் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 3-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 5-ந்தேதி தேரோட்டம், 6-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்