15 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்ட ஊருணி
15 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்பட்ட ஊருணி
தொண்டி
திருவாடானை யூனியன் கலிய நகரி கிராமத்தில் உள்ள தோப்பு பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊருணி உள்ளது. இந்த ஊருணியின் மூலம் கலியநகரி ஊராட்சி கிராம மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊருணி பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள், செடிகள் அடர்ந்து பயனற்று கிடந்தது. இதனால் ஊராட்சி மக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதன் அடிப்படையில் கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை நேரில் சந்தித்து குடிநீர் ஊருணியை தூர்வாரி தருமாறு மனு அளித்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை மூலம் முட்புதர்கள் அகற்றப்பட்டு ஊருணி தூர்வாரப்பட்டது.