நூல் அறிமுக விழா

குலசேகரன்பட்டினத்தில் நூல் அறிமுக விழா நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் அய்கோ எழுதிய குலம் காக்கும் தெய்வங்கள் என்ற குலதெய்வங்களின் வரலாற்று நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவிற்கு தாண்டவன்காடு சந்திரசேகர் தலைமை தாங்கினார். பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் குணசீலன் வரவேற்றார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன்காடு கண்ணன் நூலை வெளியிட, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அகில இந்திய வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர் அழகியநம்பி, பைந்தமிழ் கலாசார அமைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் நூலை அறிமுகப்படுத்தி பேசினர்.

விழாவில் தன்ராஜ், பெருமாள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் அய்கோ ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் சிவலூர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்