150 அரங்குகளுடன் புத்தகத் திருவிழா அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருப்பூரில் புத்தகத் திருவிழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2023-01-27 18:23 GMT


திருப்பூரில் புத்தகத் திருவிழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

புத்தகத் திருவிழா

தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா 150 அரங்குகளுடன் திருப்பூர்-காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. புத்தகத் திருவிழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் வரவேற்றார். சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையுரையாற்றினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்புரையாற்றினார். இதையடுத்து புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர். புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய பண்பாட்டு ஆளுமைகள் பங்கேற்கின்றனர்.

இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, சப்-கலெக்டர் ஸ்ருதன் ெஜய் நாராயணன், 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் மோகன கார்த்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர். தினமும் காலை 11 மணிக்கு புத்தகக் கண்காட்சி தொடங்கி இரவு 9.30 மணி வரை வருகிற 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்