கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் ஊராட்சி மன்னர் செட்டித்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் சுயமாக தொழில் செய்து வந்துள்ளார். அதில் இவருக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஊர்குடி வெள்ளைமதகு அருகில் ஒரு மரத்தில் மணிகண்டன் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.