போக்குவரத்து காவலர்கள் உடலில் கேமரா - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதிய நடைமுறை வெளியீடு
மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்களை பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் போக்குவரத்தைக் கண்காணிக்க நவீன கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும், போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்களில் கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணித்து 15 நாட்களில் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.