போடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் முருங்கைக்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-09-16 14:21 GMT

போடி பகுதியில் சில்லமரத்துப்பட்டி, சிலமலை, மணியம்பட்டி மற்றும் மலைப்பகுதிகளான முந்தல், குரங்கணி, கொட்டக்குடி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விளையும் முருங்கைக்காய் போடி தினசரி மார்க்கெட் வாரச்சந்தை தேனி மார்க்கெட் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் போடி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதற்கிடையே முகூர்த்த நாட்கள், கோவில் திருவிழாக்கள் காரணமாக முருங்கைக்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.40 வரை விற்ற முருங்கைக்காய் தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்