புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும்.! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-26 06:56 GMT

சென்னை,

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியே திறந்துவைக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல கட்சிகள் இந்த திறப்புவிழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறியுள்ளதாவது;

"தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்