ரத்த தான முகாம்
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை யொட்டி ரத்ததான முகாம் தொகுதி செயலாளர் வக்கீல் ரவிக்குமார் தலைமையில் நடந்தது. முகாமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் பூவேஸ்வரி, ஸ்ரீ வெங்கடேஷ், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபாஸ், தொகுதி தலைவர் தங்க மாரியப்பன், நகரச் செயலாளர் மகாராஜா செய்தி தொடர்பாளர் சிவா, ரத்ததான கழகத் தலைவர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 30 பேர் ரத்த தானம் செய்தனர்.