தேனி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2022-10-19 16:37 GMT

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள், டாக்டர்கள் மற்றும் இதர கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 130 பேர் ரத்த தானம் செய்தனர். பின்னர் ரத்த தானம் செய்த மாணவ-மாணவிகளுக்கு பழச்சாறு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

முகாமின்போது மருத்துவமனை டீன் கூறுகையில், இந்த ரத்ததான முகாமில் பெறப்பட்ட ரத்தம் அனைத்தும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது. தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான ரத்தம் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கண்ணன், ரத்த வங்கி டாக்டர் அனுமந்தன், மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜின்பிகான், அம்சலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்