ரத்த தான முகாம்

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-14 18:45 GMT

காரைக்குடி

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். யூத் ரெட் கிராஸ் அமைப்பின் அழகப்பா பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். யூத் ரெட் கிராஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலாயுதராஜா வரவேற்றார். இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் பகீரத நாச்சியப்பன் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி டாக்டர் அருள்தாஸ், நெற்குப்பை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் இந்திய ரெட் கிராஸ் அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராமன், காரைக்குடி குருதிக்கொடையாளர்கள் சங்கத்தின் நிறுவனர் பிரகாஷ் மணிமாறன், திருப்பத்தூர் சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்டு ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முகாமில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியை பாரதி ராணி மற்றும் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். முடிவில் கல்லூரி செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜன்கணபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்