"பாஜகவின் விலை பேசும் போக்கு நாட்டுக்கே ஆபத்து" - திமுக எம்பி டி.ஆர்.பாலு காட்டம்

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Update: 2022-11-05 00:37 GMT

சென்னை,

ஜனநாயகம் என்பது விலைபேசி விற்கும் சந்தையல்ல என்பதை பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏக்கள் 4 பேரை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் நடத்தப்பட்ட பணபேரம் குறித்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மந்தைகள் அல்ல என்பதையும் பாஜக நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதற்காக ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் சட்டத்தின் மாண்புகளையும் கட்சித்தாவல் தடை சட்டத்தையும் காலில் போட்டு மிதித்தபடி மாநில கட்சிகளின் அரசுகளுக்கு நெருக்கடியை உண்டாக்க நினைக்க 'கரன்சி பாலிடிக்ஸ்' கலாசாரத்தை இந்திய மக்கள் எந்த காலத்திலும் ஏற்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் என்றும் அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்