இந்துக்கள் குறித்து பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு

இந்துக்கள் குறித்து பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

Update: 2022-09-14 18:04 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப சமூக ஊடகப்பிரிவு சார்பில் தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றியத்தலைவர் முத்துப்பாண்டி, நலத்திட்டபிரிவு ஒன்றியத்தலைவர் வெற்றிவேல், முத்துக்குமரன், கம்பன் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஆ.ராசா எம்.பி. இந்து மதத்தையும், இந்து மத மக்களையும், இந்து மத நம்பிக்கையையும் பற்றி தொடர்ந்து இழிவாகவும், அவமரியாதையாகவும், இந்து மத மக்களுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மேலும் சர்வமத மக்களிடையேயான நல்லிணக்கத்தையும், நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் விதத்தில் தொடர்ந்து பேசுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதேபோல் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் பொன்.முருகையா தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ரெங்கையா, நாகேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். அதிலும் ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்ககோரி தெரிவித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்