பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்- மறியல்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-17 20:14 GMT

மணப்பாறை:

ஆர்ப்பாட்டம்

சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த சிவக்குமார், முனியாண்டி ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறுகனூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மறியல்

இதற்கிடையே இந்த சம்பவத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மணப்பாறையில் பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பியபடி வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்