வரும் தேர்தலில் பாஜக ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

வரும் தேர்தலில் பாஜக ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update:2023-10-05 14:59 IST

சென்னை,

சென்னையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. அதிமுக, பாஜக கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநில தேர்தல் வருகிறது. அதில் பாஜக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து. அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம்.

பாஜக ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் பாஜக ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றிகளை பெறும்." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்