காளையார்கோவில்
காளையார் கோவில் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் காளையார் கோவில் தாலுகா மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தலைவர் பில்லப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மார்த்தாண்டன் நாகராஜன், துணை தலைவர்கள் சுரேஷ்குமார், சுகனேஸ்வரி, பில்லம்மை, மாவட்ட செயலாளர்கள் நடராஜன், சங்கர சுப்பிரமணியன், மீனாதேவி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் மற்றும் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.