பா.ஜ.க. குறித்த விமர்சனங்களை வருங்காலங்களில் சி.வி.சண்முகம் தவிர்ப்பார்; நாராயணன் திருப்பதி நம்பிக்கை

வருங்காலத்தில் சிவி சண்முகம் பா.ஜ.க. குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.;

Update:2022-12-17 21:15 IST

சென்னை,

பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சி.வி.சண்முகம், பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வரும் என்றும், தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை தலைவர் அண்ணாமலை தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பா.ஜ.க. எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பா.ஜ.க.விற்கு தேவையில்லை. அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை.

மேலும், காவி துண்டு போட்டவன் பா.ஜ.க. தொண்டன் என்றெல்லாம் நிதானமில்லாமல் பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பா.ஜ.க. குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்