பா.ஜ.க. பிரமுகர் கைது

கிரிப்டோ கரன்சி வழக்கில் பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-15 21:11 GMT

திருவிடைமருதூர்:

கிரிப்டோ கரன்சி நிறுவனம்

கும்பகோணம் மேம்பாலம் அருகே கிரிப்டோ கரன்சி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. இதில் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தி ஏமாந்து விட்டதாக பல்வேறு புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 13-ந் தேதி கும்பகோணம் காரைக்கால் ரோடு விவேகானந்தர் நகரை சேர்ந்த சண்முகம் மகன் அர்ஜுன் கார்த்தி, ஸ்டேட் பேங்க் காலனி ஜோசப் பிரான்சிஸ் மனைவி இவாஞ்சலின் அபிலாதரஸ், திருப்பணிப்பேட்டை மெயின் ரோடு குப்புசாமி என்பவரது மகன் ராஜா, ராஜாவின் மகன் செல்வகுமார் ஆகிய 4 பேரையும் நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.க. பிரமுகர் கைது

இந்த நிலையில் நேற்று இதே வழக்கில் தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளராக உள்ள சாக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது30) என்பவரை போலீசார் கைது செய்தனர். கிரிப்டோ கரன்சி வழக்கில் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்