பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் - அண்ணாமலை பேச்சு

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகள் திறக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார்.

Update: 2024-03-12 15:12 GMT

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

மக்களுடன் இணைந்து போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகள் திறக்கப்படும். நாளை முதல் மார்ச் 19-ம் தேதி வரை பா.ஜ.க. சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடத்தப்படும்.

குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது, இந்த சட்டத்தை வேறு யாரும் தடுக்க முடியாது. மக்களைக் குழப்பி திசைதிருப்புவதை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எது தவறென்று மு.க. ஸ்டாலின் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்