பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம்
பொட்டல்காட்டில் பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி தெற்கு மண்டல பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய அணி மண்டல தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செண்பகராஜ் வரவேற்றார். பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் மாதவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விவசாய அணி மாவட்ட தலைவர் சங்கரகுமரய்யன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் முருகன், மண்டல துணை தலைவர் கணேசன், மண்டல பொதுச்செயலாளர் அரசகுமரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.