ரூ.43 லட்சத்தில் கிராம செயலகம் கட்ட பூமி பூஜை

மிட்டூர் ஊராட்சியில் ரூ.43 லட்சத்தில் கிராம செயலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.

Update: 2023-09-29 19:12 GMT

ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள மிட்டூர் ஊராட்சியில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிராம செயலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமை தாங்கினார். பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் சங்கீதாபாரி, துணைத் தலைவர் பூபாலன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தயாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் மீனாட்சி ராமலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்