தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்ட பூமி பூஜை

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்ட பூமி பூஜை நடந்தது.

Update: 2022-09-05 17:41 GMT

வெளிப்பாளையம்:

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கட்டிடத்தில் எந்திரவியல் பணிமனைகள், நான்கு வகுப்பறைகள், கலந்தாய்வு அறை, பணியாளர் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேலுசாமி, உதவி பொறியாளர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்