பூலித்தேவன் பிறந்தநாள் விழா

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் இன்று பூலித்தேவன் பிறந்தநாள் விழா- 1,200 போலீசார் குவிப்பு

Update: 2022-08-31 20:39 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

இதையொட்டி புளியங்குடி முதல் சங்கரன்கோவில் செல்லும் வழியில் முள்ளிகுளம் அருகே உள்ள தலைவன்கோட்டை விலக்கு வழியாக தலைவன்கோட்டை கிராமத்திற்கு சென்று, பின்னர் அடுத்துள்ள நெற்கட்டும்செவல் சென்று மரியாதை செலுத்த வேண்டும். பின்னர் ஊருக்கு மேற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சங்கனாபேரி முதல் தாருகாபுரம் செல்லும் விலக்கு வழியாக வெளியே வந்து, பின்னர் வெள்ளானைக்கோட்டை சாலையில் வந்து மதுரை -தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து வெளியேற வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை செய்த பின்னர் விழாவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்