சென்னையில் அண்ணாமலை கைது எதிரொலி: வாழப்பாடியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம்
சென்னையில் அண்ணாமலை கைது எதிரொலியாக வாழப்பாடியில் பா.ஜனதாவினர் சாலை மறியல் - ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வாழப்பாடி,
சென்னையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக கூறி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து வாழப்பாடி பஸ்நிலையம் முன்பாக நேற்று இரவு பா.ஜனதா மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் அந்த கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வாழப்பாடி பஸ் நிலையம் பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு குறுக்கே நின்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த வாழப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர். இதில், கட்சியின் அமைப்பு பொது செயலாளர்கள் நாராயணன், எம்.கே.குமார், அயோத்தி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.