உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி

உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்தது. வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-02-22 19:32 GMT

வெற்றிலை சாகுபடி

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முனிநாதபுரம், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூர வெற்றிலையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

இதனை உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் செயல்பட்டு வரும் அசோசியேசன் வெற்றிலை மண்டிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ.10,500-க்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூர வெற்றிலை ஒரு சுமை ரூ.6 ஆயிரத்திற்கும் விற்பனையானது. நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூர வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்