அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

Update: 2023-10-02 22:02 GMT

அந்தியூர்

அந்தியூர் வாரச்சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இதில் ராசி வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.80-க்கும், அதிகபட்சமாக ரூ.130-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்சம் ரூ.50-க்கும், அதிகபட்சமாக ரூ.60-க்கும், செங்காம்பு வெற்றிலை ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்