பெங்களூரு - சென்னை சென்டிரல் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

பெங்களூரு - சென்னை சென்டிரல் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-29 16:15 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக தலைநகர் பெங்களூருவுக்கு தினமும் வந்தே பாரத், சதாப்தி, 'டபுள் டக்கர்' உள்ளிட்ட ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூரு - சென்னை சென்டிரல் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, வழக்கமாக பெங்களூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22626) அதேநாள் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

வரும் மே மாதம் 1-ந்தேதி முதல் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும். ஏற்கனவே புறப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் முன்பாக புறப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்