கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலை பண்டல்

வேதாரண்யம் அருகே கடற்கரையில் பீடி இலை பண்டல் ஒதுங்கியது. இதை கைப்பற்றி கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-18 19:30 GMT

வேதாரண்யம் அருகே கடற்கரையில் பீடி இலை பண்டல் ஒதுங்கியது. இதை கைப்பற்றி கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீடி இலைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கடலோர பகுதியாகும். வேதாரண்யம், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதும், அங்கிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தி வருவதும் அடிக்கடி நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் கோடியக்கரை பம்ப் ஹவுஸ் அருகே ஒரு சாக்குப்பையில் 5 பண்டல் பீடி இலைகள் கரை ஒதுங்கி இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

25 கிலோ எடை

அதன்படி கடலோர காவல் படையினர் கோடியக்கரைக்கு சென்று அங்கு கடற்கரையோரம் கிடந்த 5 பண்டல் பீடி இலைகளை கைப்பற்றினர். 25 கிலோ எடை இருந்த பீடி இலைகள் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பீடி இலை பண்டல்கள் கோடியக்கரையில் இருந்து கடத்தி இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து, கரை ஒதுங்கியதா? அல்லது கடத்தி செல்வதற்காக கடற்கரையில் பதுக்கி வைத்திருந்தனரா? மேலும் வேறு எங்கேயாவது பீடி இலை பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி கடலோர காவல் படையினர், 'கியூ' பிரிவு போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்