பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் பேசினார்
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அவை கூடத்தில் ஒன்றியக் குழுவின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி வரவேற்றார். ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் பேசுகையில், தற்போது பருவ மழை அதிகமாக பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழை மற்றும் இயற்கை சீற்றத்தை எதிர்க்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கிராமங்களில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசி சென்றாலோ, அல்லது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மரங்கள் கிடந்தாலோ அவற்றை ஊராட்சி மன்ற தலைவர்களுடன் சேர்ந்து அகற்ற நடவடிக்கை வேண்டும். என்றார். இதில் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அலுவலக மேலாளர் சம்பந்தம் நன்றி கூறினார்.