கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு

கரூாில் நடந்த கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு நடந்தது.

Update: 2023-03-19 18:40 GMT

எழுத்தறிவு ேதா்வு

தாந்தோணி ஒன்றியத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 64 பள்ளிகளில் 73 மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் 1,420 பேர் கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் கற்ற அடிப்படை எழுத்தறிவை மதிப்பீடு செய்யும் பொருட்டு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று 73 மையங்களில் நடைபெற்றது.

முன்ேனற்பாடு பணிகள்

இந்தத் தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியரும், அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர். தேர்வானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதில் கற்போர் தாங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதினர். இந்தத் தேர்வினை முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலுடன் வட்டார வளமைய மேற்பார்வையாளரும், வட்டார கல்வி அலுவலர்களும், ஆசிரியர் பயிற்றுனர்களும் இணைந்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்