கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர்

ஆனைமலை-உடுமலை சாலையில் ‘தினத்தந்தி’ செய்தியால் கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.;

Update:2023-10-09 02:15 IST
ஆனைமலை-உடுமலை சாலையில் 'தினத்தந்தி' செய்தியால் கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கால்வாய்

கோவை மாவட்டம் ஆனைமலையில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்க பணி நடைபெற்றது.

அங்கு அரியாபுரம் கால்வாய் ஓரத்தில் வளைவான பகுதி உள்ளது. இங்கு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்துவிடும் அபாயம் நிலவியது. இதை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

தெருவிளக்கு வசதி

இது தொடர்பாக கடந்த 3-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

ஆனைமலையில் இருந்து உடுமலை செல்லும் வழித்தடத்தில் அரியாபுரம் கால்வாய் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமான 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி. மேலும் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த வசதியை ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்