தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் - வேளாண் இணை இயக்குனர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:-
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மே மாதம் 23-ந் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இத்திட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக, தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத்தை மேம்படுத்தி சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்கு வசதியாக கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.