புதிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன்

புதிய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.

Update: 2023-08-07 18:42 GMT

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் கரூர் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் வசிக்கும் 18 வயது நிரம்பிய ஏழை குடும்பங்களை சேர்ந்த மகளிரை கொண்டு புதிதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட உள்ளது. புதிதாக தொடங்கப்படும் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வங்கி கடன் பெற்று தரப்படும். இந்த கடனிற்கு 7 சதவீதத்திற்கு மேல் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 ஆயிரம் சுழல்நிதியாக வழங்கப்படுகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மாநகராட்சி, பள்ளப்பட்டி, புகளூர், குளித்தலை நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் உள்ள இதுவரை மகளிர் குழுவில் இணையாத பெண்கள் உடனடியாக மகளிர் குழுவில் இணைந்து அனைத்து பயன்களையும் பெற்று கொள்ளலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்