வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வாரம் 5 நாள் வேலை, ஓய்வூதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.