வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-03 20:14 GMT

சேலம்,

சேலம் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கோட்டை கனரா வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் கல்யாணராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் சம்பத், துணைத்தலைவர்கள் மீனாட்சி, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொழிற்சங்க உரிமைகள் மீதான தாக்குதல்களை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்ட விதிகளை மீறக்கூடாது. இரு தரப்பு ஒப்பந்தம், தொழிலாளர் நலச்சட்ட விதிகளை மீறக்கூடாது. ஒப்பந்தங்களை மீறி வங்கி ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது. ஊழியர்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தத்தை முறையாக அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் கூறும் போது, கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வருகிற 19-ந்தேதி வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்