அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில்ரூ.4½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில்ரூ.4½ லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

Update: 2023-09-17 22:19 GMT

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஒலகடம், சென்னம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.55-க்கும், நேந்திரம் ரூ.300-க்கும் ஏலம் போனது.

பூவன் (தார்) ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.800-க்கும், தேன்வாழை ரூ.750-க்கும், ரஸ்தாளி ரூ.620-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.350-க்கும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 700-க்கு வாழைத்தார்கள் விற்பனையானது. ஈரோடு, திருப்பூர், சத்தியமங்கலம், பெருந்துறை, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்