வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் பூவன் தார் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-09-12 19:06 GMT

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர், முத்தனூர், திருக்காடுதுறை, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் அருகாமையில் செயல்பட்டு வரும் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி ரூ.400-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்