குண்டடம்
குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் ருத்ரவாதி, குண்டடம்,முத்துகவுண்டன் பாளையம், இடையப்பட்டி, தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இது பற்றி விவசாயிகள் கூறியதாவது :-
இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் வாழை சாகுபடி செய்துள்ளோம். நாட்டு நேந்திர ரக வாழை சாகுபடி செய்துள்ளோம். சாகுபடி செய்ய வாழை கிழங்கு, உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வாழை கிழங்கு நடவு செய்து 1 வருடத்தில் வாழைதார் விற்பனைக்கு அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வாழை தார் கிலோ ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 20 டன் முதல் 25 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.இதே போல் நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.