கும்பகோணம் காவிரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கும்பகோணம் காவிரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Update: 2022-07-25 19:52 GMT

கும்பகோணம்,

கும்பகோணம் சோலையப்பன் தெரு பரிசல் துறை பகுதியில் காவிரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பால்குட திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) கஞ்சி வார்த்தல் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்