உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடந்தது.;
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பாலாலயம்திருச்சி உறையூரில் உள்ள காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை மகர லக்னத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, விமானம் கலாகர்ஷணம் முதல்கால யாகபூஜை, பூர்வாங்க பூஜைகளும், அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 7.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 9 மணியளவில் கோவில் விமானங்களுக்கு சித்திர படத்தில் பாலாலய பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.