கோதண்ட ராமர் கோவிலில் பாலாலயம்
கோதண்ட ராமர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.;
ஆரணி
கோதண்ட ராமர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
ஆரணி கொசப்பாளையம் தச்சூர் சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில் மிகப் பழமையான கோவிலாகும் இக்கோவிலை புதுப்பித்து மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து சமய அறநிலைத்துறை மூலம் உபய திருப்பணி மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பாலாலயம் நடைபெற்றது. முகுந்தன் பட்டாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜைகளை நடத்தினர். பின்னர் பூஜைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை பாலாலய செய்யப்பட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தினர்.