அய்யனார் கோவிலில் பாலாலய பூஜை

அய்யனார் கோவிலில் பாலாலய பூஜை

Update: 2023-02-01 18:41 GMT

தொண்டி

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சி நாவலூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதிதாக திருப்பணி செய்வதற்கு நாவலூர், பனஞ்சாயல் கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று இந்த கோவிலில் இருந்த விநாயகர், முருகன், பூர்ணா புஷ்கலா சமேத பட்டுடைய அய்யனார், கருப்பர் காளியம்மன், சாம்பான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜைகளை திருப்புனவாசல் சுப்பையா குருக்கள் நடத்தினார். இதில் நாவலூர், பனஞ்சாயல் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்